

உலக பொருளாதார மாநாட்டின் 50-வது ஆண்டுக் கூட்டம் அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற உள்ளது. உலகளாவிய தொழில் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பல ரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியாவிலிருந்து முன்னணி 100 நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர். அவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலங்களவை உறுப்பினர் மன்ச் மாண்டவியா ஆகியோரும், அமரீந் தர் சிங், கமல்நாத், பி.எஸ்.எடியூரப்பா உள்ளிட்ட முதல்வர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதி மிர் புதின் ஆகியோர் இந்த மாநாட் டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு மாநாடு உலக வளர்ச்சியில் தொழில் பங்குதாரர்களின் முக்கியத்தை மையப்படுத்த உள்ளது. கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, குமார் மங்களம் பிர்லா, டாடா குழுமத்தின் என். சந்திரசேக ரன், உதய் கோடக், ஆனந்த் மஹிந்திரா, எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.