

இந்திய தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான தாராள வர்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) மத்திய அரசு மேற்கொள்ளாது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சில தாராள வர்த்தக ஒப்பந்தங் கள் இந்திய நிறுவனங்களையும், ஏற்றுமதியாளர்களையும் பாதிக் கும். அதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் அரசு தீவிரம் காட்டாது. இந்திய தொழில் நிறுவ னங்களுக்கு சாதகமாக இருக்கும் ஒப்பந்தங்களில் மட்டுமே அரசு கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆர்சி இபி ஒப்பந்தத்தில் இந்தியா இணைய மறுத்தது. அதை துணிச்ச லான முடிவு என்று கூறினார்.
கடந்த நவம்பர் மாதம் பாங்காக் நகரில் ஆர்சிஇபி மாநாடு நடைபெற் றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியாவுக்கான சாதக அம்சங்கள் எதுவும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை. எனவே ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா இணையாது’ என்று தெரிவித்தார்.
ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்தால் வேளாண்மை மற்றும் தொழில் துறை சார்ந்த ஏராளமான பொருட்களை உறுப்பு நாடுகளுக்கு சீனா குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யும். இந்தியாவுக்கு பலன் கிடைக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில். ஆர்சிஇபி ஒப்பந்தம் மீதான இந்திய அரசின் முடிவை மோடி திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ), ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பியூஷ் கோயல், ‘ஆர்சிஇபி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட முடிவு மிகத் துணிச்சலானது. அந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்தப் பயணும் இல்லை. அந்த ஒப்பந்தம் முழுக்கவும் சீனாவுக்கு சாதக மானது. இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளாது’ என்று தெரி வித்தார்.
‘அதேமயம் ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா விலகுவது என்பது உலகளாவிய வர்த்தக போக்கில் இருந்து விலகுவதாக அர்த்தம் இல்லை. இந்திய நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் ஒப்பந்தங்களில் மத்திய அரசு ஈடுபடும். அமெரிக்கா-இந்தியா இடையே மேற்கொள்ளப்பட இருக்கும் வர்த்தக ஒப்பந்தம் அத்தகைய ஒன்று. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளும் பயனடையும்’ என்றார்.
‘முந்தைய அரசின் ஆட்சி காலத்தில் இந்திய தொழில் நிறு வனங்கள் கடும் பாதிப்பை சந்தித் துள்ளன. குறிப்பாக 2010-11-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தாராள ஒப்பந்தத்தினால் இந்திய நிறுவனங்கள் பெரிய அளவில் பயனடையவில்லை. நிறுவனங் களைப் பாதிக்கும் அடிப்படை பிரச்சினைகளை முந்தைய அரசு அடையாளம் காணத் தவறிவிட்டது’ என்றார்.
‘ஆனால் தற்போதைய அரசு இந்திய நிறுவனங்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு உற்பத் தியை அதிகரிக்க பல்வேறு முயற்சி களை மத்திய அரசு மேற் கொண்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.