

பங்குச்சந்தைகளில் இன்று வர்த்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையில் அவற்றின் வர்த்தகம் நம்பிக்கை அளிக்கும் வகையில் காணப்பட்டதால் கடந்த மாத இறுதியில் பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.
குறிப்பாக வங்கித்துறை பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டன. பிற நிறுவனங்களின் பங்குகளும் உயர்வடைந்தன. அதன் பிறகு சற்று நிதான நிலையில் பங்கு வர்த்தகம் இருந்தது. இந்தநிலையில் சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல் சற்று தணியும் சூழல் ஏற்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் நேர்மறையான எதிரொலி இருந்தது.
இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் இன்று எதிராலித்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 324 புள்ளிகள் உயர்ந்து 41,262 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 12,142 புள்ளிகளை கடந்துள்ளன.