

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சரிந்துள்ள நிலையில், இந்தியா அடிப்படை கட்டமைப்பு சீர்திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல சட்டங்களில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுழற்சி முறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் இந்திய பொருளாதாரம் சில சவால்களை எதிர்கொண்டுவருகிறது. அதை சில சீர்திருத்தங்கள் வாயிலாகத் தான் நிவர்த்தி செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.
5 டிரில்லியன் டாலர் பொருளா தாரமாக உயர்வதற்கு கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவ தோடு, கட்டமைப்பு துறையில் அரசின் செலவுகள் அதிகரிக்க வேண்டும். அத்துடன் ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரி விதிப்பு முறை களில் மேலும் பல மாற்றங்களை செய்ய வேண்டியதும் அவசியம். அதன் மூலம்தான் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க முடியும் என்று சுட்டிக் காட்டினார்.
மத்திய, மாநில அரசுகள் பற்றாக் குறையை கட்டுக்குள் வைப் பதோடு, கடனுக்கான வட்டியை குறைத்து அதிக அளவிலான நிதி புழக்கத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். வரி கெடு பிடிகள் இல்லாத சூழலை வெளிப் படைத்தன்மையை உருவாக்கு வதன் மூலம்தான் கொண்டு வர முடியும் என்றார்.
சுகாதாரம், கல்வி ஆகியவற் றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சி சாத்தியமாகும். இந்தியா வில் தற்போது நிலவும் தேக்க நிலை ஐஎம்எஃப் உட்பட பல நிறுவனங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது என்றார் கீதா கோபிநாத்.