

அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்பட இருந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை சீனா நிறுத்தி வைத்துள்ளது. சீனப் பொருட்கள் மீதான புதிய வரிகளை அமெரிக்க அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து, சீனா இந்த முடிவை நேற்று அறிவித்தது.
அமெரிக்க- சீனா இடையேயான வர்த்தகப்போர் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கியது. சீனப் பொருட்களுக்கு அமெரிக் காவும், அமெரிக்கப் பொருட் களுக்கு சீனாவும் மாறி மாறி வரி விகிதத்தை உயர்த்தி வந்தன.
பிற நாடுகளும் பாதிப்பு
இதனால் இரு நாட்டு நிறுவனங் களும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின. இந்த இரு நாடுகளின் வர்த்தகப் போர் பிரச்சினை அவ்விரு நாடுகளை மட்டுமல்லாமல், பிற உலக நாடுகளையும் பாதித்தது. விரைவிலேயே அமெரிக்காவும், சீனாவும் இந்தப் போரை நிறுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப் பட்டு வந்த நிலையில், அது தொடர்பான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.கடந்த வெள்ளி அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனப் பொருட்கள் மீதான புதிய வரிகளை ரத்து செய்தார். அதைத் தொடர்ந்து சீனாவும் தனது வரி விதிப்பை நிறுத்தி உள்ளது.
இது தொடர்பாக சீனா வர்த்தக அமைச்சகம் கூறியதாவது:
‘அமெரிக்க இறக்குமதி களுக்கு விதிக்கப்பட இருந்த 10% மற்றும் 5% சதவீத வரி விதிப்பு நடவடிக்கை தற்போது நிறுத்து வைக்கப்படுகிறது. அமெரிக்க வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் மீதான கூடுதல் வரியும் நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது. வெள்ளிக்கிழமை அன்று சீனாவுக்கும் அமெரிக் காவுக்கும் இடையில் வர்த்தக உறவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து இருநாடுகளும் தங் களின் கூடுதல் வரி விதிப்புகளை நிறுத்திவைத்துள்ளன.
ஆனால், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் விவகாராம் தொடர்பாக இன்னும் இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத் தாகவில்லை.
வர்த்தகப் போர் உலக நாடுகளைப் பாதித்த நிலையில் உலக அமைப்புகள் பலவும் இரு நாடுகளும் சுமுகமாக இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தின.
இந்நிலையில் இருநாடுகளும் சில கசப்பான சந்திப்புகள், பேச்சுகளுக்குப் பிறகு சுமுக பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டன. தற்போது சுமுக பேச்சுவார்த்தை பலன் தர தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.