

2020-21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேபோல்,பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட்டுக்கு ஒருநாள் முன்னதாக ஜனவரி 31-ம் தேதி அன்று வெளியிடப்படும்.
மோடி அரசு இரண்டாவது முறை பதவியேற்ற நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான பட் ஜெட் ஜூலை 5-ம் தேதி அறிவிக் கப்பட்டது. பொருளாதார ஆய் வறிக்கை ஒருநாள் முன்னதாக ஜூலை 4-ம் தேதி வெளியிடப் பட்டது. இந்நிலையில் 2020-21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ர வரி தாக்கல் செய்யப்பட உள்ளது.
பிப்ரவரி 1-ம் தேதி சனிக் கிழமை என்பதால், பட்ஜெட் அறி விப்புக்கான நாள் மாற்றப்படுமா என்று சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், பட்ஜெட் வெளியீடு எந்த மாற்றமுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் என்று மக் களவை விவகாரங்களுக்கான அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஏப்ரல் முதல் மார்ச் வரை யிலான காலம் ஒரு நிதி ஆண்டு என்று ஆகும். ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான பட்ஜெட், அதற்கு முந்தயை நிதி ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம். ஏனென்றால், பட்ஜெட் பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டால் தான், அதை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைபடுத்துவதற்கு வசதியாக இருக்கும். நாளை முதல் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோ சனைக் கூட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.