

கார்வி நிறுவனம், விதிகளுக்கு புறம்பாக வங்கிகளில் அடமானம் வைத்த பங்குகள் அதன் வாடிக்கையாளர்களுக்கே சொந்தம்; கார்வி நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகள் அந்த பங்குகளில் உரிமை கொள்ள முடியாது; அது தொடர்பாக அந்த வங்கி
களுக்கு எந்த நிவாரணம் வழங்க முடியாது என்று ``செபி'' தீர்ப்பளித்துள்ளது.
பங்கு தரகு நிறுவனமான கார்வி, அதன் 95,000 வாடிக்கையாளர்களின் ரூ.2,300 கோடி மதிப்பிலான பங்குகளை ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முறைகேடாக அடமானம் வைத்து
நிதி திரட்டியது. இந்த மோசடி சமீபத்தில் வெளிவந்த நிலையில், அந்நிறுவனத்தின் பங்கு தரகு உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் 83 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பங்குகள் திரும்பவழங்கப்பட்டன.
இந்நிலையில், கார்வி நிறுவனம் அதன் பங்குகளை தங்களிடம் அடமானம் வைத்துதான் நிதி திரட்டியது. ஆனால் அந்தப் பங்கு
கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கே திரும்ப வழங்கப்பட்டுள்ளன. கார்வி நிறுவனத்துக்கு கடன் அளித்த முறையில் அந்தப் பங்குகளில் தங்களுக்கு உரிமை உண்டு என்று கார்விக்கு கடன் அளித்த ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இந்த் வங்கி உள்ளிட்ட வங்கிகள் முறையிட்டன. வாடிக்கையாளருக்கு பங்குகளை திரும்ப வழங்கியது தொடர்பாக செபியின் உத்தரவை எதிர்த்து அந்த வங்கிகள், கடன் பத்திரங்கள் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் (எஸ்ஏடி) மனு தாக்கல் செய்தன. அந்த மனுவை உடனடியாக விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்க செபிக்கு எஸ்ஏடி கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மனு மீதான தனது தீர்ப்பை செபி வழங்கியுள்ளது. அதில் செபி கூறியிருப்பதாவது, ‘வாடிக்கையார்களின் பங்குகளை பங்கு தரகு நிறுவனம் வேறு எங்கும் அடமானம் வைக்கக்கூடாது என்பது பங்குச் சந்தை தொடர்
பான விதிமுறைகளில் ஒன்று. ஆனால் கார்வி நிறுவனமோ அந்த விதிமுறைகளை பின்பற்றாமல், முறைகேடாக அதன்
வாடிக்கையாளர்களின் பங்குகளை வங்கிகளில் அடமானம் வைத்து நிதி திரட்டி மோசடி செய்துள்ளது.
வங்கிகள், கார்வியின் பங்குகள் குறித்து முறையான விவரங்களை பெறத் தவறி உள்ளன. விதிகளுக்குப் புறம்பாக அடமானம் வைத்த பத்திரங்களுக்குத்தான் வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. அந்தப் பங்குகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு சொந்த
மானவை. எனவே அப்பங்குகளை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கியதே சரியானது. வங்கிகள் அதில் உரிமை கொள்ள முடியாது’ என்றி கூறியுள்ளது.
கார்வி நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் பங்குகளை அடமானம் வைத்து ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து ரூ.642 கோடியும், ஹெச்டிஎஃப்சி வங்கியிடமிருந்து ரூ.208 கோடியும், பஜாஜ் பைனாஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.345 கோடியும், இண்டஸ்இந்த் வங்கி
யிடமிருந்து ரூ.159 கோடியும்கடன் வாங்கியது.