

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த செயின்ட் ஜான் பிராப்பர்ட்டிஸ் என்ற நிறுவனம், அதன் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கியுள்ளது.
நிறுவனம் அதன் ஆண்டு இலக்கை எட்டியதைத் தொடர்ந்து அதன் தலைவர் எட்வர்ட் செயின்ட் ஜான், நிறுவன ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமை இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அப்போது ஊழியர்களுக்கு ஒரு சிவப்பு கவரில் 38 ஆயிரம் பவுண்டுகள் (ரூ.35 லட்சம்) வைத்து வழங்கப்பட்டது.
இதுகுறித்து அதன் தலைவர் ஜான் கூறுகையில், ‘ஊழியர்கள் அனைவரின் கடின உழைப்பினால் நிறுவனம் அதன் இலக்கை எட்டி உள்ளது. அவர்களுக்கு எனது நன்றியை இந்தப் பரிசு மூலம் தெரிக்க விரும்பினேன்’ என்றார். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 200 ஊழியர்களுக்கும் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ.70 கோடி கிறிஸ்துமஸ் போனஸாக வழங்கப்பட்டுள்ளது.