

இன்போசிஸ் நிறுவனம் அதிக லாபம் ஈட்டும் நோக்கில், தவறான தகவல்களை முதலீட்டாளர் களுக்கு வழங்கி இருப்பதாக அமெரிக்க சட்ட நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஷால் சட்ட நிறுவனம் அளித்த புகாரில், இன்போசிஸ் நிறுவனம் லாபம் ஈட்டும் நோக்கில் பங்குச் சந்தைக்கு தவறான கணக்குகளை காட்டியுள் ளது. அதன் முதன்மை செயல் அதி காரி சலீல் பாரெக் நிறுவன கணக் குகள் மீதான முறையான தணிக்கை களை தவிர்த்துள்ளார்.
உண்மையான கணக்குகளை மறைக்க நிறுவனத்தின் நிதிக் குழுவுக்கும் அழுத்தம் தரப்பட்டிருக் கிறதுஎன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணை யில் 2018 ஜூலை 7-ம் தேதி முதல் 2019 அக்டோபர் 20-ம் தேதி வரை இன்போசிஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்களை வாங்கிய முதலீட்டாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித் துள்ளது. வெரிசோன், இன்டெல், ஏபிஎன் ஆம்ரோ மற்றும் ஜப்பா னில் உள்ள துணை நிறுவனங் களுக்கு இன்போசிஸ் சேவை வழங்கி வந்துள்ளது.
அதன் மூலம் பெறப்பட்ட தொகையில் முறை கேடு நடந்ததாக கடந்த அக்டோபர் மாதம், பெயர் வெளியிடாத இன்போசிஸ் ஊழியர்கள் சிலர் அமெரிக்காவின் பங்குச் சந்தை பரிவர்த்தனை ஆணையத்திடம் (எஸ்இசி) புகார் அளித்தனர்.
பெரிய நிறுவனங்களுக்கு வழங்கி வரும் சேவையினால் இன் போசிஸ் நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடையாது. ஆனால், லாபம் அதிகமாகக் கிடைக்கும் என சிஇஓ சலீல் பாரெக் தெரிவித்துள்ளதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் லாபம் மட்டுமே கடந்த காலாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தணிக்கை அதிகாரி எதிர்ப்பு தெரிவித்தபோது இந்த பிரச்சினை தொடர்ந்து விவாதிக்கப்படாமல் தள்ளிப்போடப்பட்டது என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்போசிஸ் நிறு வனம் மீது மீண்டும் புகார் அளிக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கு செய்தி வெளியானதை அடுத்து இன் போசிஸ் பங்குகள் நேற்று 2.6 சதவீதம் இறக்கம் கண்டு வர்த்தகம் ஆயின.