

அதானி குழுமம் தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்தோடு கூட்டு சேர உள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளிவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்ஸ்கான் - அதானி குழும ஒப்பந்தத்தின் மூலம் மின்னணு பொருட்கள் இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்படுள்ளது. இதற்காக வரும் ஆண்டுகளில் 500 கோடி டாலர் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாக்ஸ்கான் நிறுவனம் சர்வதேச அளவில் மின்னணு கருவிகளை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து தருகிறது. ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை இந்த நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. தைவானிலிருந்து செயல்படும் இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைக்க குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இடங் களை பார்வையிட்டுச் சென்றது. இந்த நிலையில் முதல் இரண்டு ஆலைகள் குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் அமைய உள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன.
இந்தியாவில் தங்கத்துக்கு அடுத்தபடியாக மின்னணு கருவிகள்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆப்பிள் மற்றும் கிண்டில் போன்ற பிராண்டுகள் உள்ளிட்ட மின்னணு கருவிகள் இந்த ஆலைகளில் உற்பத்தி செய் யப்படும்.
மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவித்துவரும் நிலையில் பாக்ஸ்கான்-அதானி குழும ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.