சொத்துகளை விற்று வோடஃபோன் ஐடியா ரூ.17,500 கோடி திரட்ட திட்டம்

சொத்துகளை விற்று வோடஃபோன் ஐடியா ரூ.17,500 கோடி திரட்ட திட்டம்
Updated on
1 min read

கடும் கடன் சுமையில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனம், நிதி திரட்டும் நோக்கில் அதன் சில சொத்துகளை விற்பதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் மாதம் முடிந்த 2-ம் காலாண்டில் வோடஃபோன் நிறுவனம் ரு.50,922 கோடி அளவில் நஷ்டத்தை சந்தித்தது. தொலை தொடர்பு நிறுவனங்கள், அதன் நிறுவன உரிமத் தொகை, அலைக் கற்றை பயன்பாடுக்கான தொகை என கடந்த 14 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய தொகையுடன் அதற்கான வட்டி மற்றும் அபராதத்தையும் உடனடியாக செலுத்த வேண்டும் என்று சமீபத் தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டது. இந்நிலையில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் அதன் குறிப் பிட்ட சில சொத்துகளை விற்று ரூ.17,500 கோடி அளவில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

ஆப்டிக் ஃபைபர் தொடர்பான அதன் வியாபாரங்களை ப்ரூக் ஃபீல்ட் சொத்து மேலாண்மை நிறு வனத்துக்கும், தகவல் மையத்தை எடில்வைஸ் குழுமத்துக்கும் விற்க உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. நேற்றைய வர்த்தக முடி வில் பங்கு மதிப்பு 3.05% உயர்ந்து ரூ.6.75-க்கு வர்த்தகமானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in