

பங்கு தரகு நிறுவனமான பிஎம்ஏ வெல்த் மீது பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையம் (செபி) நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். கார்வி நிறுவனம் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கையைப் போல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 50-க் கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் செபி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
பாந்த்ரா குர்லா வளாகத்தில் (பிகேசி) அமைந்துள்ள செபி அலு வலகத்தை முதலீட்டாளர்கள் முற்று கையிட்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பிஎம்ஏ வெல்த் நிறுவனம் பங்கு தரகு நடவடிக்கைகளில் ஈடுபட தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) கடந்த அக்டோபர் மாதம் தடை விதித்தது. ஆனால், பிஎஸ்இ நட வடிக்கை மிகவும் மெத்தனமாக உள் ளது.
இதனால் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இப் பிரச்சினையில் செபி நேரடியாக தலையிட கோரியும் முதலீட்டா ளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
கார்வி நிறுவனத்தின் நட வடிக்கையில் செபி தலையிட்டு முதலீட்டாளர்களின் பங்குகளை அவர்களது கணக்குக்கு மாற்றித் தர உத்தரவிட்டது. அதேபோல பிஎம்ஏ வெல்த் நிறுவனத்திடம் முதலீட்டாளர்கள் அளித்துள்ள பங்கு தொகைகளை அவர்களது கணக்குக்கு மாற்றித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கார்வி விவகாரத்தில் செபி தலையிட்டு என்எஸ்டிஎல் மூலம் 82,599 பங்குகளை உரிய முதலீட் டாளர்களின் பெயர்களுக்கு மாற்றித் தந்தது. பிஎம்ஏ வெல்த் கிரியேட்டர் நிறுவனம் பங்குச் சந்தை விதிகளை மீறியதால் தேசிய பங்குச் சந்தை அமைப்பு தொடர்ந்து சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்தது.
இதற்கு முன்பு ஐஎல்அண்ட் எஃப்எஸ், அம்ரபாலி ஆத்யா டிரேடிங் அண்ட் இன்வெஸ்ட் மென்ட்ஸ், காஸா ஃபின்வெஸ்ட், யுனிகான், வாசந்தி செக்யூரிட் டீஸ், ராயல் இன்டர்நேஷனல், கிளிக்2டிரேட் உள்ளிட்ட தரகு நிறுவனங்கள் உரிய விதிமுறை களைப் பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்தது. இந்தப் புகாரில் சிக்கியுள்ள நிறுவனங்களில் சில முதலீட்டாளர்களின் பங்குகளைத் தங்கள் சொந்த கணக்குக்கு மாற்றியும், பிற முதலீடுகளில் முதலீடு செய்தும் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
ஃபேர்வொர்த் செக்யூரிட்டீஸ் மற்றும் பிஎம்ஏ வெல்த் ஆகிய நிறுவனங்கள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவற்றில் வர்த்த கம் புரிய தடை விதிக்கப்பட்டுள் ளது. பிஎம்ஏ நிறுவனம் முதலீட் டாளர்களின் பங்குகள் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஃபேர்வெல்த் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. செபிக்கு தாக்கல் செய்ய வேண் டிய வாராந்திர தகவல் அறிக்கை யையும் அந்நிறுவனம் தாக்கல் செய்யவில்லை.