

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்க 25 மையங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் தொழில் முனைவோரை உருவாக்க திட்ட மிட்டுள்ளதாக நிறுவனத்தின் சர்வ தேச பிரிவுத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஜூடித் மெக்கெனா தெரிவித்தார்.
இந்த திட்டத்துக்கு ‘வால் மார்ட் விருத்தி சப்ளையர் மேம் பாட்டு திட்டம்’ என பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்தியாவில் தங் களது நிறுவனத்தின் நீண்டகால செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளதாக அவர் கூறி னார். இந்த மையங்கள் அனைத்தும் உற்பத்தி கூட்டமைப்புகள் உள்ள இடங்களில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச அளவில் வால்மார்ட் நிறுவனம் தனது செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. சீனா, அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து 5-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை தங்களது சப்ளை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை வால்மார்ட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை வால்மார்ட் பெற்று வருகிறது. விவசாயிகள், சிறு வியா பாரிகள், எம்எஸ்எம்இ துறையின ரின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதன் மூலம் தனது சப்ளை தாரர்களாக அவர்களை மாற்றி வரு கிறது.
இப்பிரிவினரின் தேவைகள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிக் கும் நடவடிக்கைகள் உள்ளிட் டவைகளுக்கு தொடர்ந்து முதலீடு களை நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
தற்போது வால்மார்ட் நிறுவனம் 27 இடங்களில் மொத்த விற்பனைய கங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் 5 ஆயிரத்துக்கும் மேலான பொருட்கள் விற் பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர, ஸ்வஸ்தி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத் துடனும் வால்மார்ட் ஒப்பந்தம் செய் துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் பிளிப்கார்ட்டை வால்மார்ட் கைய கப்படுத்தியது. இந்நிறுவனத்தின் 77 சதவீத பங்குகள் தற்போது வால்மார்ட் வசம் உள்ளன.