

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தைவிட குறைவாகவே இருக்கும் என சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ தெரிவித்துள்ளது.
நிதித் துறை தொடர்ந்து நெருக் கடியில் இருக்கிறது. வாராக் கடன் கள் காரணமாக, வங்கிகள் கடன் அளிப்பதில் தயக்கம் காட்டுகின் றன. விளைவாக நிதி சுழற்சி குறைந் துள்ளது. இதனால் சிறு வர்த்தகர் கள், தொழில் முனைவோர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். முதலீடுகள் குறைந்துள்ளன. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்று அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் வித மாக, மத்திய அரசு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுவருகிறது. அவை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்த சில காலம் ஆகும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
முதலீடுகளை பெருக்குவதற் காக மத்திய அரசு நிறுவனங் களுக்கான நிறுவன வரியை 10 சதவீதம் அளவில் குறைத்தது. அந் நிய முதலீடு தொடர்பான கட்டுப் பாடுகளும் தளர்த்தப்பட்டன. ரிசர்வ் வங்கியும் மக்களின் நுகர்வை அதி கரிக்கும் நோக்கில் இந்த ஆண்டில் தொடர்ந்து 5 முறை ரெப்போ விகிதத்தை குறைத்து உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகளின் தாக்கத்தை சில காலத்துக்குப் பிறகே தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவீதமாக குறைந்தது. தற்போதைய பொரு ளாதார நெருக்கடியை சரி செய்ய மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்துவருகிறது.
இருந்தபோதிலும், இந்தியா வின் பொருளாதார நிலை முன் பிருந்ததைவிட மோசமடைந்து இருப்பதாக மூடி’ஸ் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண் டாம் காலாண்டில், நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.
விவசாயத் துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை தற்போது பொருளாதார சரிவுக்கு முக்கியமான காரணமாகும்.
8 முக்கிய ஆதார தொழில்துறை களின் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடும் சரிவை சந் தித்து உள்ளது. செப்டம்பர் மாதத் தில் அதன் உற்பத்தி 25 சதவீதம் அளவில் சரிந்துள்ளது. இதனால் வேலையிழப்பும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை செலுத் தும்.
இந்நிலையில் நடப்பு நிதி யாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தைகூட எட்டுவது கடினம் என்று தெரிவித்துள்ளது