

வங்கியின் இணையவழி பணப்பரி மாற்ற சேவையான நெஃப்ட், வரும் 16-ம் தேதி முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.2 லட்சம் வரையிலான பணப் பரிமாற்றத்துக்கு வாடிக் கையாளர்கள் நெஃப்ட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தற் போதைய நடைமுறையில் வங்கி வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையில் மட்டுமே நெஃப்ட் சேவையை பயன் படுத்த முடியும். அதேபோல் சனிக் கிழமைகளில் குறிப்பிட்ட நேரத் தில் மட்டுமே இச்சேவையை பயன் படுத்த முடியும்.
இந்நிலையில், டிசம்பர் 16-ம் தேதி முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் நெஃப்ட் சேவையை பயன் படுத்தலாம். டிஜிட்டல் பரிவர்த் தனையை ஊக்குவிப்பதற்காக ஆர்பிஐ இந்த முடிவை எடுத் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. கடந்த ஜூலை மாதம், நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் வழியே செய்யப்படும் பரிவர்த்தனைகளுக் கான சேவைக் கட்டணத்தை ஆர்பிஐ ரத்து செய்தது குறிப்பிடத் தக்கது.