Published : 30 Aug 2015 12:36 PM
Last Updated : 30 Aug 2015 12:36 PM

கடன் வழங்கும் விகிதம் 8.6 சதவீதம்

வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் ஜூன் காலாண்டில் 8.6 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் கடன் வளர்ச்சி விகிதம் 12.9 சதவீதமாக உள்ளது. அதேபோல வங்கி டெபாசிட்டுகளின் வளர்ச்சி விகிதமும் 10.6 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 11.9 சதவீதமாக இருக்கிறது.

வங்கிகளுக்கு கிடைத்திருக்கும் டெபாசிட்டுகளில் 72.5 சதவீதம் பொதுத்துறை வங்கிகளுக்கு வந்திருக்கிறது. அதேபோல கொடுக்கப்பட்டிருக்கும் கடன்களில் 70.4 சதவீதம் பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்த டெபாசிட்டுகளில் தனியார் வங்கிகளின் பங்கு 19.8 சதவீதமாகவும், தனியார் வங்கிகள் கொடுத்த கடன் அளவு 20.6 சதவீதமாகவும் உள்ளது.

வங்கிகளுக்கு வந்துள்ள பிஸினஸ்களில் (டெபாசிட் மற்றும் கடன் சேர்ந்து) 7 மாநிலங்களில் இருந்து மட்டும் 68.3 சதவீதம் நடந்துள்ளது.

மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மூலம் இவை நடந்திருக்கிறது. மகாராஷ்ட்ராவில் மட்டும் 25.5 சதவீத வர்த்தகம் நடந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x