இலவச வரம்பற்ற கால்கள்: ஏர்டெல், வோடஃபோன் திடீர் அறிவிப்பு

இலவச வரம்பற்ற கால்கள்: ஏர்டெல், வோடஃபோன் திடீர் அறிவிப்பு
Updated on
1 min read

செல்போன் கட்டணங்களில் மற்ற நெடவொர்க் வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு வோடஃபோன், ஜியோ, ஏர்டெல் கட்டணம் நிர்ணயித்த நிலையில் திடீரென ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுடன் பேசும் கட்டணத்தை நீக்கி இலவசமாக்கியுள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கட்டணத் திட்டங்களுடன் அறிவிக்கப்பட்ட மற்ற நெட்வொர்க் உடனான குரல் அழைப்பு வரம்பு அகற்றப்படுகிறது" என அறிவித்துள்ளது.

இதேபோன்று வோடஃபோன் நிறுவனமும் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இலவச, கட்டணமில்லா அழைப்புகள் குறித்து அறிவித்துள்ளது.


சமீபத்தில் ஜியோ தனது வாடிக்கையாளர் பயன்பாட்டுத் திட்டத்தை மாற்றியது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் அடுத்த நெட்வொர்க்கை அழைத்தால் ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என கட்டணம் நிர்ணயித்தது.


இதையடுத்து வோடஃபோன், ஏர்டெல் நிறுவனங்களும் வாடிக்கையாளர் கட்டணத்தை மாற்றி அமைத்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேசுவதற்குக் கட்டணம் நிர்ணயித்தன. இந்நிலையில் நேற்று ஏர்டெல் நிறுவனம் தனது சலுகையை அறிவித்தது. அதைத் தொடர்ந்து வோடஃபோன் நிறுவனமும் தனது சலுகையை அறிவித்துள்ளது.


அதன்படி இனி அடுத்த நெட்வொர்க் பயன்பாட்டாளர்களுடன் தொடர்வதற்கான கட்டணம் இல்லை. கட்டண வரம்பற்ற இலவச அழைப்புகள் என்று அறிவித்துள்ளன. ஜியோ விரைவில் வரம்பற்ற இலவச அழைப்புகள் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகக் தகவல் வெளியான நிலையில் இவ்விரு நிறுவனமும் முந்திக் கொண்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in