Published : 07 Dec 2019 02:21 PM
Last Updated : 07 Dec 2019 02:21 PM

தங்கம் விலை: ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்தது

பிரதிநிதித்துவப் படம்

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபாய் குறைந்தது. இதனால், தங்கம் விலை சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்குக் கீழே சரிந்தது.

கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, சமீபகாலமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று (டிச.7) ஒரே நாளில் தங்கம் விலை சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்குக் கீழே குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, 28 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 28 ரூபாய் குறைந்து, 3,612 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 46 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 1,000 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x