

நீர் மேலாண்மையில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என்று வாபேக் நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டுத் தலைவர் ரஜ்னீஷ் சோப்ரா தெரிவித்தார். ‘நீர் மேலாண் மையில் இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் இரண்டும் உலக நாடு களுக்கு முன்னுதாரணமாக திகழ் கிறது. அந்நாடுகளில் பின்பற்றப் படும் நீர் மேலாண்மை வழி முறைகளை, இந்தியாவும் பின் பற்ற வேண்டும். கழிவு நீரை, குடிநீராக்கி பயன்படுத்தும் செயல் முறைக்கு இந்தியா மாற முற்பட வேண்டும்’ என்று அவர் தெரி வித்தார்.
சென்னையை தலைமை யிடமாகக் கொண்ட நீர் சுத்தி கரிப்பு மற்றும் பராமரிப்பு நிறுவன மான வாபேக், பல்வேறு நாடுகளில் நீர் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ‘ஒரு நகரம் ஒரே ஆபரேட்டர்’ என்ற திட்டத்தை துருக்கியில் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கங்கையை சுத்தப்படுத்து வதற்கு உத்திரப் பிரதேச அரசு இந்நிறுவனத்துடன் ரூ.1,477 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத் தின்கீழ், ஆக்ரா மற்றும் காஸியா பாத் நகரங்களின் தினசரி பயன் பாட்டுக்கான குடிநீரை சுத்திகரிப்பு செய்யும் பணியிலும் இந்நிறுவனம் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நீர் மேலாண் மையில் தமிழகத்தின் செயல்பாடு குறித்து அவர் கூறுகையில், நீர் மேலாண்மைப் பணிகளில் தமிழகம் முன்மாதிரியான செயல் திட்டங்களை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.