

வோடஃபோன் ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. அரசு நிவாரணம் வழங்காவிட் டால், நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று வோடஃபோன் ஐடியா நிறுவனத் தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா தெரிவித்துள்ளார்.
ஜியோ நிறுவனத்தின் வருகைக் குப் பிறகு வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இச்சூழலை எதிர் கொள்ளும் வகையில் வோடஃ போன் மற்றும் ஐடியா கடந்த ஆண்டு ஒன்றாக இணைந்தன. இருந்த போதிலும் அந்நிறுவனம் தொடர்ச்சி யாக நஷ்டத்தை சந்தித்து வந்தது.
மோசமான சரிவு
இந்நிலையில், செப்டம்பர் மாதம் முடிந்த இரண்டாம் காலாண் டில் ரு.50,922 கோடி அளவில் நஷ் டத்தை சந்தித்தது. அதேபோல், ஏர் டெல் நிறுவனமும் ரூ.23,000 கோடி அளவில் இழப்பை சந்தித்துள்ளது. இது தொலை தொடர்பு நிறு வனங்கள் எதிர்கொண்ட மிக மோசமான சரிவு ஆகும்.
நிறுவன உரிமத் தொகை, அலைக்கற்றை பயன்பாட்டுக்கான தொகை என கடந்த 14 ஆண்டு களுக்கு செலுத்த வேண்டிய தொகையுடன் அதற்கான வட்டி மற்றும் அபராதத்தையும் சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தவகையில் வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் மொத்தமாக ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அந்நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இரண்டாம் காலாண் டில் இந்தியாவின் வளர்ச்சி 4.5 சத வீதமாக சரிந்துள்ளது. இந்நிலை யில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க அனைத்து நிறுவனங் களுக்கும் மத்திய அரசு சலுகை திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இதில் அரசின் இலக்கான டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடி நாதமாக தொலை தொடர்பு துறை விளங்குகிறது. எனவே அத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
தொலை தொடர்பு நிறுவனங் கள் தொடர்ந்து செயல்படும் வகையில் அதிக அளவிலான சலுகைகளை அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவ் வாறு வழங்கப்படாவிட்டால், நிறு வனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.
சமீபத்தில், இந்திய தொழில் அமைப்புகளான சிஐஐ மற்றும் எஃப்ஐசிசிஐ, ‘தொலை தொடர்பு நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியில் இருக்கின்றன. மத்திய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டன.
‘தற்போதைய பிரச்சினை தொலை தொடர்பு நிறுவனங் களை மட்டுமல்ல, அதைச் சார்ந்து செயல்படும் பிற நிறுவனங் களையும் தீவிரமாக பாதிக்கும். இத் துறையில் பல நிறுவனங்கள் போட்டியில் இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான வளர்ச்சி யாக இருக்கும்’ என்று சிஐஐ-ன் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.
இந்தச் சூழ்நிலையில், குமார் மங்களம் பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ.63,700 கோடியில் (9.1 பில்லியன் டாலர்) இருந்து ரூ.42,000 கோடியாக (6 பில்லியன் டாலர்) குறைந்து உள்ளது. மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் ரூ.21,000 கோடி அளவில் இழப்பை சந்தித்து உள்ளார்.