

சர்வதேச அளவில் பங்குச் சந்தை யில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக சீன பங்குச் சந்தையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவில் சீனாவில் பணக்கார தொழி லதிபர் வாங் ஒரே நாளில் 360 கோடி டாலர் பண நஷ்டத்தைச் சந்தித் துள்ளார்.
கட்டுமான துறை, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறையில் சீனாவின் முன்னணி நிறுவனமான டலியான் வாண்டா நிறுவனத்தின் தலைவராக வாங் ஜியான்லின் திங்கள் கிழமை ஏற்பட்ட சந்தை சரிவு காரணமாக ஒரே நாளில் தனது சொத்து மதிப்பில் 10 சதவீதத்தை இழந்துள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களை பட்டியலிடும் புளூம்பர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் ஷாங்காய் சந்தை திங்கள்கிழமை 8.49 புள்ளிகள் சரிந்தது. 2007க்கு பிறகு சீனா சந்தித்த மிகப் பெரிய சரிவு இது என்கின்றனர்.
சர்வதேச சந்தைகளில் ஏற் பட்ட மந்த நிலை, உலகின் இரண்டாவது பெரிய பொருளா தார நாடான சீனாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலையில் ஷாங்காய் சந்தை செவ்வாய்க்கிழமை மீண்டும் 7.63 புள்ளிகள் சரிந்து மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, 3000 புள்ளிகளுக்கு சந்தை குறைந்துள்ளது என்று புளூம்பர்க் குறிப்பிட்டுள்ளது. திங்கள் கிழமை நிலவரப்படி மிகப்பெரிய நஷ்டத்தை வாங் சந்தித்துள்ளார். செவ்வாய்கிழமை நிலவரம் உடனடியாக கிடைக்கவில்லை. இந்த ஆண்டில் 600 கோடி டாலர் லாபத்தை வாங் சந்தித் துள்ளார்.
சீனாவின் இரண்டாவது பணக்காரரான அலிபாபா நிறுவனர் ஜாக் மா 54.5 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளார் என்றும் புளூம்பர்க் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.