

இந்த ஆண்டின் இறுதி நிதி கொள்கை கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
பொருளாதார மந்த நிலையைத் தடுக்க பிப்ரவரியில் தொடங்கிய வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து வந்தது. இந்த வருடத்தில் நடத்தப்பட்ட 5 நிதிக் கொள்கை கூட்டத்திலும் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு தொடக்கத்தில் 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் இந்த ஆண்டில் நடைபெற்ற 5 நிதிக் கொள்கை கூட்டங்களில் 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாக இருந்தது.
எனினும் மீண்டும் ஆறாவது முறையாக இன்று நடக்கும் கூட்டத்திலும் வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
பொருளாதாரத்தையும் சந்தையையும் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு ஜிடிபி 4.5 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதனால் வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு பொதுவாக இருந்து வந்தது.
இந்தநிலையில் இந்த ஆண்டின் இறுதி நிதி கொள்கை கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது. வட்டி விகிதத்தை மாற்றாவிட்டாலும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நடவடிக்கைகள் எடுப்பது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வகிதம் 5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.