Published : 03 Dec 2019 11:12 AM
Last Updated : 03 Dec 2019 11:12 AM

பங்கு வர்த்தக மோசடி எதிரொலி கார்வி நிறுவனத்தின் தரகு உரிமம் ரத்து

புதுடெல்லி

வாடிக்கையாளர்களின் பங்கு களை அடமானம் வைத்து நிதி திரட்டும் மோசடியில் ஈடுபட்டதால் கார்வி நிறுவனத்தின் அனைத்து தரகு உரிமங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. பங்குச் சந்தைகளான என்எஸ்இ, பிஎஸ்இ இரண்டும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

ஹைதராபாத்தை தலையிட மாகக் கொண்ட கார்வி நிறுவனம் நாட்டின் முன்னணி தரகு நிறுவனங் களில் ஒன்றாகும். இது 2016-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர் களின் ரூ.2,300 கோடி மதிப்பிலான பங்குகளை முறைகேடாக பயன் படுத்தி நிதி திரட்டி உள்ளது.

இந்த நிதியை வேறு கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதை தேசிய பங்குச் சந்தை சமீபத்தில் கண்டுபிடித்தது. இதை யடுத்து கார்வி நிறுவனத்தின் செயல் பாடுகளுக்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி தடை விதித்தது. புதிய வாடிக்கையாளர் களைச் சேர்க்கவும், வாடிக்கையா ளர்கள் நிதி மற்றும் பங்குகளை வர்த்தகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கார்வி நிறுவனத்தின் பங்கு தரகு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள் ளன. இதன்படி கேபிடல் மார்க்கெட், எஃப் அண்ட் ஓ, கரன்சி டெரிவேட் டிவ்ஸ், கடன் சந்தை, எம்எஃப் எஸ்எஸ் மற்றும் கமாடிட்டி டெரி வேட்டிவ் என அனைத்துவிதமான வர்த்தக உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது கார்வியில் வர்த்தக கணக்குகளை வைத்திருப்பவர்கள், பிற தரகு நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என என்எஸ்இ, பிஎஸ்இ தெரிவித்துள்ளன.

அதேசமயம், கார்வி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை வழங்க ‘பவர் ஆஃப் அட்டார்னி’ நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்குமாறு செபியிடம் கோரிக்கை மனு விடுத் தது. ஆனால், இந்த மனுவை செபி நிராகரித்துள்ளது. தொடர்ந்து கார்வி நிறுவனத்தின் செயல்பாடு கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன.

கார்வி மோசடி விவகாரத் தில் செபியின் உடனடி நடவடிக்கை களால், அந்நிறுவனத்தில் கணக்கு வைத்திருந்த 90 சதவீத முதலீட் டாளர்களின் பங்குகள் அவர்களுக் குத் திரும்ப வழங்கப்பட்டுள்ளன என்று என்எஸ்டிஎல் தெரிவித்துள் ளது. மொத்தமான 95 ஆயிரம் முதலீட்டாளர்களில் ஏறக்குறைய 83 ஆயிரம் முதலீட்டாளர்களின் பங்குகள் திரும்ப கிடைத்துள் ளன. மீதமுள்ள முதலீட்டாளர்களின் பங்குகள் விரைவில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x