

அரசை எதிர்த்து விமர்சிக்கும் சுதந்திரம் இல்லை என்று ராகுல் பஜாஜ் தெரிவித்த கருத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
தொழிலதிபரும் பஜாஜ் குழுமத் தின் தலைவருமான ராகுல் பஜாஜ் இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி போன்ற வற்றை சுட்டிக்காட்டி அரசின் செயல்பாடுகளையும் கொள்கை களையும் விமர்சித்தார். ஆனால், அவருக்கு ஆதரவாகவோ, அல் லது வேறு சந்தர்ப்பத்திலோ பெரிய அளவில் தொழில் துறை யிலிருந்தோ, தொழிலதிபர்களிடம் இருந்தோ அரசின் மீதான விமர் சனங்கள் எதுவும் முன்வைக்கப் படவில்லை. இதுகுறித்த ஆதங் கத்தை சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்தார்.
“நீங்கள் சிறப்பாக செயல்படு கிறீர்கள். நல்லது. ஆனால், ஏதேனும் விமர்சனம் இருந்தால் அதை வெளிப்படையாக எங்களால் சொல்ல முடிவதில்லை. சொல்ல முடியும் என்ற நம்பிக்கையும் வருவதில்லை” என்றார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, “யாரும் எதற்கும் பயப்பட தேவையில்லை. விமர்சிக்க வேண்டிய தேவை இருந் தால் விமர்சிக்கலாம். சொல்லப் போனால், அதிகம் விமர்சிக்கப்பட்ட அரசாக நாங்கள்தான் இருக் கிறோம்” என்றார்.
இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமனும் தனது கருத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். “ராகுல் பஜாஜின் கேள்விக்கு அமித் ஷா சிறப்பாக பதிலளித்துள்ளார். அரசின் மீது வைக்கப்படும் விமர் சனங்கள் கேள்விகள் அனைத்தை யும் கணக்கில் எடுத்துக்கொண்டு எதிர்வினை ஆற்றிவருகிறோம். ஆனால், ஒரு தனிநபரின் விருப் பத்தை பரப்புவதற்கு மாற்றாக தீர்வு தேடும் வழிகள் பல உள்ளன. தனிநபரின் விருப்பத்தை பரப்புவது தேச நலனை பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.