

ஆசியாவிலேயே இந்தியர்களின் ஊதியம் அதிகபட்சமாக 9.2 சத வீதம் உயரும் என கார்ன் ஃபெர்ரி குளோபல் ஊதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் இந் தோனேசியாவில் 8.1 சதவீத மாகவும், சீனாவில் 6 சதவீதமாகவும் ஊதிய உயர்வு இருக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளது. இது ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடு களில் மிகக் குறைவாக 2 சதவீதம், 3.9 சதவீதம் என்ற நிலையில் இருக்கும் எனவும் கூறுகிறது.
இந்தியாவில் தற்போது பொருளாதார மந்தநிலை இருந்தாலும், ஊதிய உயர்வு விஷயத்தில் பிற நாடுகளைக் காட்டிலும் சிறப்பாகவே உள்ளது. மேலும் அரசின் சமீபத்திய சந்தை ஊக்குவிப்பு நடவடிக்கைகள், சலுகைகள் மற்றும் வட்டி விகித குறைப்பு போன்றவை பல துறைகளுக்கும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளன.
இதனால் ஊதிய உயர்வு வரும் 2020-ல் 9.2 சதவீதம் எனும் அள வில் இருக்கும். ஆசியாவி லேயே இந்தியாவில்தான் ஊதிய உயர்வு அதிகமாகக் கணிக்கப் பட்டுள்ளது என்று கார்ன் ஃபெர்ரி நிர்வாக இயக்குநர் ராஜிவ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பணவீக்க உயர்வு காரணத்தினால் பண வீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு உள்ள உண்மையான ஊதிய உயர்வு 5 சதவீதமாக இருக்கும் எனவும் கார்ன் ஃபெர்ரி அறிக்கை தெரிவித்துள்ளது.