

நிர்வாக மோசடியால் முடங்கிய பிஎம்சி வங்கியிலிருந்து அதன் வாடிக்கையாளர்கள் தங்களது முழு இருப்பையும் எடுத்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏறக்குறைய 78 சதவீத வாடிக் கையாளர்கள் தங்களின் முழு இருப்பையும் எடுத்துக்கொள்ள இதன் மூலம் வழிவகை செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் வரம்பு
கடந்த செப்டம்பர் மாதத்தில் பஞ்சாப் அண்ட் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் அம்பலமான நிர்வாக மோசடியால் வங்கியின் மொத்த செயல்பாடும் முடங்கியது. வங்கியில் இருப்பு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய சொந்த பணத்தை எடுக்கவே ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. முதலில் ரூ.1,000 மட்டுமே எடுக்க முடியும் எனக் கூறியது. பின்னர் பெரும் எதிர்ப்பு கிளம்பவே, ரூ.10 ஆயிரமாக உயர்த்தியது. தற்போது ரூ.50 ஆயிரம் வரை எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள் ளது.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சை, திருமணம் மற்றும் பிற நெருக்கடி காரணங்களுக்காக பணம் தேவைப்படும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் இருப்பில் ரூ.1 லட்சம் வரை எடுத்துக் கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் 78 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களின் முழு இருப் பையும் எடுக்க அனு மதிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் சிறு இருப்பு தாரர்கள். இந்த நடவடிக்கை மூலம் சிறு இருப்புதாரர்களின் பிரச் சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புரொமோட்டர் சொத்துகள் ஏலம்
மேலும் பிஎம்சி வங்கியின் புரொமோட்டர்களின் சொத்துகள் கைப்பற்றப்பட்டு, அவற்றை ஏலம் விட ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதன் மூலம் திரட்டப்படும் நிதி வாடிக்கையாளர்களின் இருப்பு தொகையை வழங்க பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.