Published : 02 Dec 2019 12:02 PM
Last Updated : 02 Dec 2019 12:02 PM

விலை உயர்வை கட்டுப்படுத்த துருக்கியிலிருந்து 11,000 டன் வெங்காயம் இறக்குமதி

வெங்காய விலை உயர்வை தடுக்கவும், தட்டுப்பாட்டை குறைக்கவும் துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை அரசு இறக்குமதி செய்ய உள்ளது. உள்நாட்டு வெங்காய தேவை அதிகமாகவும் வரத்து குறைவாகவும் இருப்பதால் வெங்காயம் கடந்த சில வாரங்களாக கடுமையான விலை உயர்வை சந்தித்தது. சில நகரங்களில் கிலோ வெங்
காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்க அரசு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்தது. 1.2 லட்சம்டன் வரை இறக்குமதி செய்து
கொள்ள மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அரசு வர்த்தக நிறுவனமான எம்எம்டிசி முதல் கட்டமாக எகிப்திலிருந்து 6,090 டன் வெங்காயம் சமீபத்தில் இறக்கு மதி செய்தது. தற்போது இரண்டாம் கட்டமாக துருக்கியிலிருந்து 11,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் உள்நாட்டு வரத்து சீராகி, விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரும் ஜனவரியில் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x