

தொலை தொடர்பு நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியில் இருக்கின்றன. மத் திய அரசு இப்பிரச்சினையில் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று இந்திய தொழில் அமைப்புகளான சிஐஐ மற்றும் எஃப்ஐசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளன.
இந்திய தொழில் துறை கூட்ட மைப்பின் (சிஐஐ) தலைவர் விக் ரம் கிர்லோஸ்கர் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எஃப்ஐசிசிஐ) தலைவர் சந்தீப் சோமனி இருவரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், தொலை தொடர்பு நிறுவனங்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொலைத் தொடர்பு நிறுவனங் கள் அதன் நிலுவைத் தொகைகளை விரைவில் திருப்பி செலுத்த வேண் டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா, ஏர்டெல் போன்ற நிறுவனங் கள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளன. தவிர, ஜியோ நிறுவனத் தின் வருகைக்குப் பிற நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின் றன. இந்நிலையில் இது தொடர் பாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
சிஐஐ-யின் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் எழுதிய கடிதத்தில், ‘தற்போதைய பிரச்சினை தொலை தொடர்பு நிறுவனங்களை மட்டு மல்ல, அதைச் சார்ந்து செயல்படும் பிற நிறுவனங்களையும் தீவிரமாக பாதிக்கும். இத்துறையில் பல நிறுவனங்கள் போட்டியில் இருக்க வேண்டும். அதுவே ஆரோக் கியமான வளர்ச்சியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
எஃப்ஐசிசிஐ தலைவர் சந்தீப் சோமனி எழுதிய கடிதத்தில், ‘தற்போது தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.7 லட்சம் கோடி அளவில் கடன்கள் உள்ளன. இதனால் புதிய தொழில் நுட்பங்கள் சார்ந்து அதன் முதலீடு பாதிக்கப்படும்.
இந்நிலையில் ஏஜிஆர் தொடர்பான சமீபத்திய தீர்ப்பு அந்நிறுவனங்களை மேலும் பாதிக்கக் கூடியதாக அமையும். இதில் உரிய நேரத்தில் அரசு தலை யிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது பிற நிறுவனங் களையும் பாதித்து, நாட்டின் பொரு ளாதாரத்திலும் தாக்கத்தை ஏற் படுத்தும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஜியோ நிறுவனத்தால், ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்தக் கடிதங்கள், அவ்விரு நிறு வனங்களுக்கு ஆதரவாகவும், ஜியோ நிறுவனத்தின் போக்குக்கு எதிராகவும் எழுதப்பட்டதாக தெரி கிறது.