

பங்கு தரகு நிறுவனமான கார்வி, அதன் வாடிக்கையாளர்களின் பங்குகளை முறைகேடாக பயன் படுத்திய விவகாரத்தில் பங்குச் சந்தைகள் மீதும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது. ஏன் பங்குச் சந்தைகள் உரிய காலத்தில் கார்வி நிறுவனத்தின் முறைகேட்டை கண்டுபிடிக்கத் தவறின என்பது குறித்து செபி விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹைதராபாத்தை தலைமையிட மாக கொண்ட கார்வி நிறுவனம், பங்கு தரகு பணியில் ஈடுபட்டு வரு கிறது. இந்தியாவில் செயல்படும் மிகப் பெரிய பங்கு தரகு நிறுவனங் களில் கார்வியும் ஒன்று. இந்நிலை யில் அதன் வாடிக்கையாளர்களின் ரூ.2,300 கோடி மதிப்புள்ள பங்கு களை அடமானம் வைத்து ரூ.600 கோடி நிதி திரட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலை யில், கார்வி நிறுவனம் இனி புதிய வாடிக்கையார்களை சேர்ப்பதற்கும் மற்றும் வாடிக்கையாளர்களின் பணம், பங்குகளை வர்த்தகம் செய் வதற்கும் செபி கடந்த வாரம் (நவம்பர் 22) இடைக்கால தடை விதித்தது.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய பங்குச் சந்தை நடத்திய தணிக்கையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப் பட்டது. முதற்கட்ட விசாரணையில் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான ரூ.1,096 கோடியை அதன் குழும நிறுவனமான கார்வி ரியாலிட்டுக்கு மாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது பங்கு தரகு தொடர்பாக நடை பெற்ற மிகப் பெரிய மோசடி என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மோசடி 2016-19 காலகட்டத்தில் நடை பெற்று இருக்கிறது. ஆனால் இவ்வளவு காலம் கழித்துதான் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஏன் மோசடி நடை பெற்ற காலகட்டத்திலேயே பங்குச் சந்தைகள் இதை கண்டறிய வில்லை என்பது குறித்து செபி விசாரணை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது போலான முறைகேடுகளில் வேறு பங்கு தரகு நிறுவனங்களும் ஈடு பட்டு இருக்கின்றனவா என்பது குறித்தும் செபி விசாரித்து வருகிறது.
இதுகுறித்து கார்வி நிறுவனம் கூறியபோது, ‘இது இடைக்கால தடை தான். விரைவில் செபி மற்றும் பங்குச் சந்தைகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும்’ என்று தெரிவித் தது. ‘தற்போதைய நிலையில் 200-க்கும் குறைவான வாடிக் கையாளர்களின் ரூ.25 கோடி மட் டுமே நிலுவை இருக்கிறது. வழக்க மான சேவையை கார்வி தொடரும்’ என்று அதன் தலைவர் சி.பார்த்த சாரதி தெரிவித்தார்.