

இண்டிகோ நிறுவனம் அதன் ஏ320 நியோ விமானங்களில் பயன் படுத்தும் இன்ஜின்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) நேற்று முன்தினம் உத்தர விட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இண்டிகோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.42 சதவீதம் அளவில் சரிவைக் கண்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் அதன் ஏ320 நியோ விமானங்களில் பிராட் அண்ட் விட்னே இன்ஜினை பயன்படுத்தி வருகிறது. அந்த இன்ஜின் மீது வெளிநாடுகளிலும் பல்வேறு புகார் உள்ளது. இந் நிலையில் இண்டிகோ நிறுவனம் அந்த இன்ஜின்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் அந்த விமானங்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
அதற்கென்று ஜனவரி 31 வரை காலக்கெடு அளித்து உள்ளது. அதன் பிறகும் அவை மாற்றப் படாதபட்சத்தில் அந்த விமானங் களின் செயல்பாடுகள் முடக்கப் படும் என்று எச்சரித்து உள்ளது.
விமானங்களின் இன்ஜின் களை மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய வர்த்த முடிவில் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.42 சதவீதம் சரிந்து ரூ.1,415 க்கு விற்பனையானது.