நிதி நெருக்கடியில் உள்ள ஆர்காம் சொத்துகளை வாங்க ஜியோ, ஏர்டெல் விண்ணப்பம்

நிதி நெருக்கடியில் உள்ள ஆர்காம் சொத்துகளை வாங்க ஜியோ, ஏர்டெல் விண்ணப்பம்
Updated on
1 min read

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சொத்துகளை வாங்குவதற்கு, முகேஷ் அம்பானிக்குச் சொந் தமான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உட் பட 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அனில் அம்பானிக்குச் சொந்தமானதாகும். நிதி நெருக்கடியில் உள்ள இந்நிறுவனம் தற் போது திவால் நடைமுறைக்குள் உள்ளது. இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் கூட்டமைப்பு, ஆர்காம் சொத்து களை வாங்க விரும்பும் நிறுவனங்கள் டெண் டர் விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது. கால அவகாசம் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டதால் ஆர்-ஜியோ நிறுவனம் டெண்டர் படிவத்தை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 13-ம் தேதி ஆர்காம் சொத்துகளை வாங்குவதற்கு சுனில் மிட்டல் தலைமை யிலான பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி இன்ஃபிராடெல் நிறுவனங்கள் மற்றும் பிஇ நிறுவனமான வார்தே பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு உள்ள கடன் பொறுப்புகள் ரூ.33 ஆயிரம் கோடி ஆகும். இந்நிறுவனம் மீது திவால் நடை முறை சட்டம் செயல்படுத்தப்படுகிறது. சொத்துகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து டெண்டர் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஆனால் கால அவகாசத்தை நீட்டித்தால் தாங்களும் விண்ணப்பிப்பதாக ரிலையன்ஸ் ஜியோ குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

ஆனால், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது முறையற்ற செயல் எனக் கூறி ஏர்டெல் நிறுவனம் சொத்துகளை வாங்கும் முடிவி லிருந்து வெளியேறப் போவதாக தெரி வித்தது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத் துக்கு பாரத ஸ்டேட் வங்கி, சீனா மேம்பாட்டு வங்கி, சீனாவின் தொழில் வர்த்தக வங்கி உட்பட மொத்தம் 40 நிறுவனங்கள் கடன் வழங்கியுள்ளன. இந்நிறுவனத்தின் மீதான திவால் நடைமுறையை இந்நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஓசி) மேற்கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக அலைக்கற்றை, செல்போன் டவர், கண்ணாடி யிழை கேபிள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகள் உள்ளன.

2018-ம் ஆண்டு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர்களை ரூ. 43 ஆயிரம் கோடிக்கு வாங்க ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம் செய்தது.

1.78 லட்சம் கிலோமீட்டர் அளவுக்குள்ள கண்ணாடியிழை கேபிள் மற்றும் அதை பயன்படுத்தும் ஸ்பெக்ட்ரம் உள்ளிட்டவற்றை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பாதியில் முறிந்துபோனது. தற்போது மீண்டும் ரிலையன்ஸ் ஜியோ ஆர்காம் சொத்துகளை வாங்க விண்ணப்பித்துள்ளது. உடன் ஏர்டெல் நிறுவனமும் விண்ணப்பித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in