Published : 26 Nov 2019 08:49 AM
Last Updated : 26 Nov 2019 08:49 AM
உள்நாட்டு உற்பத்தி எனும் பெருமை யுடன் இயங்கிவந்த நோக்கியாவின் சென்னை ஆலையை சால்காம்ப் நிறுவனம் வாங்க உள்ளது.
நோக்கியா ஆலையை சால் காம்ப் நிறுவனம் ரூ.215 கோடிக்கு வாங்குகிறது. இந்நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு பாகங்களை விநியோகம் செய்யும் முன் னணி நிறுவனமாகும். இந்நிறுவ னம் தனது உற்பத்தி செயல்பாடு களை வரும் 2020 மார்ச் மாதத் தில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`மேக் இன் இந்தியா' திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பிருந்தே உள் நாட்டு உற்பத்தி என்ற பெருமையுடன் செயல்பட்டு வந்தது நோக்கியாவின் இந்த சென்னை ஆலை. 2006-ல் தொடங்கப்பட்ட நோக்கியாவின் ஆலை உலகின் பெரிய உற்பத்தி ஆலைகளில் ஒன் றாகத் திகழ்ந்தது. மொபைல் என் றாலே நோக்கியா என்ற அளவுக்கு பிரபலமாகவும் இருந்தது.
ஆனால், நாளடைவில் நவீன மாற்றத்துக்கு ஏற்ப மாற்றங்களைச் செயல்படுத் தாததால் தொழிலில் பின்தங்கியது. அதோடு 2014-ம் ஆண்டில் நோக்கியா நிறுவனத்துக்கும் வரித் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளால் முழு வதுமாக தனது செயல்பாடுகளை நிறுத்திவிட்டு வெளியேறியது நோக்கியா. இதனால் அதன் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்தனர்.
பின்னர், நோக்கியா தனது மொபைல் உற்பத்தி தொழிலை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. ஆனால், இந்த ஆலையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கவில்லை.
இந்நிலையில் தற்போது நோக்கி யாவின் சென்னை ஆலையை சால்காம்ப் நிறுவனம் வாங்குவது உறுதியாகி இருக்கிறது. ரூ.215 கோடிக்கு இந்த ஆலையை வாங்கு கிறது. தேவையான உரிமம் மற்றும் அனுமதி ஒப்புதல்களைப் பெற்ற பிறகு இந்த ஆலையில் உற்பத்தி செயல்பாடுகளைத் தொடங்க உள்ளதாக சால்காம்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள் ளது. முழுவதுமாக ஆலை இயக்கத் துக்கு வந்த பிறகு, இதன் மூலம் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.