

டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான சுந்தரம் பாசனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ‘குவாலிட்டி ரத்னா’ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
தரமான பொருட்களை உற் பத்தி செய்வதில் தொழில் துறையினருக்கு முன்னோடியாகத் திகழ் பவர் சுரேஷ் கிருஷ்ணா என்றும், தொழில்முறையில் மட்டுமின்றி தன் சொந்த வாழ்விலும் தரத்தினை ஒருபோதும் சமரசம் செய்து கொள் ளாதவர் என்றும் அவருக்கு வழங்கப்பட்ட விருதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஜப்பான் தொழிற்சாலை நிர்வாக கூட்டமைப்புடன் இணைந்து டிபிஎம் (முழுவதும் தர மேலாண்மை) என்ற கூட்டமைப்பை இந்தியா வில் 1998-ம் ஆண்டு ஏற்படுத்தியவர் சுரேஷ் கிருஷ்ணா என்றும் விருதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரசாயனம், உரத் துறை அமைச் சர் டி.வி. சதானந்த கவுடா இந்த விருதை அவருக்கு வழங்கினார்.