Published : 10 Aug 2015 10:12 AM
Last Updated : 10 Aug 2015 10:12 AM

ஐந்து வர்த்தக தினங்களில் ரூ.2,200 கோடி முதலீடு

கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 2,200 கோடி ரூபாயை இந்திய சந்தையில் முதலீடு செய்திருக் கிறார்கள்.

கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக முதலீட்டாளர்கள் கருவது வதால் இந்த முதலீடு வந்திருக் கிறது.

கடந்த ஜூலை மாதம் 5323 கோடி ரூபாய் முதலீடு இந்திய சந்தைக்கு (பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை) வந்ததை தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் முதலீடு தொடர்கிறது.

ஆனால் முந்தைய மாதங்களான மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகமான தொகை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் 14,272 கோடி ரூபாயும், ஜூன் மாதம் 1,608 கோடி ரூபாயும் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3-7-ம் தேதி வரை 2,184 கோடி ரூபாய் முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக் கிறது. இதில் 1,552 கோடி ரூபாய் பங்குச்சந்தையிலும் 631 கோடி ரூபாய் கடன் சந்தை யிலும் முதலீடு செய்யப்பட்டிருக் கிறது.

சீனப்பங்குச்சந்தை சரிவு, கிரீஸ் பிரச்சினை ஆகிய காரணங்களால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். தவிர தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவும் முதலீடு அதிகரிக்க ஒரு காரணமாகும்.

2015-ம் ஆண்டில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்கள் 45,952 கோடி ரூபாயை பங்குச் சந்தையிலும் 39,982 கோடி ரூபாயை கடன் சந்தையிலும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

மியூச்சுவல் பண்ட்

நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 2 லட்சம் கோடி ரூபாய் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் இதே காலத்தில் 1.13 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 1.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் 39,066 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த காலத்தில் கோல்ட் இடிஎப்களில் இருந்து 281 கோடி ரூபாய் வெளியே எடுக்கப்பட் டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x