Published : 25 Nov 2019 03:33 PM
Last Updated : 25 Nov 2019 03:33 PM
பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டன.
வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையில் அவற்றின் வர்த்தகம் நம்பிக்கை அளிக்கும் வகையில் காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் பங்குச்சந்தையில் இந்த மாதத்தின் தொடக்கம் முதல் ஏற்றம் காணப்பட்டது.
குறிப்பாக வங்கித்துறை பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டன. பிற நிறுவனங்களின் பங்குகளும் உயர்வடைந்தன. இதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் இன்றும் எதிரொலித்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 487 புள்ளிகள் உயர்ந்து, 40,847 புள்ளிகளாக ஏற்றம் கண்டது. நிப்டி 136 புள்ளிகள் உயர்ந்து 12,051 புள்ளிகளை தொட்டது. இந்த ஏற்றம் இதுவரை இல்லாத ஒன்றாகும்.
எச்டிஎப்சி, இண்டஸ்இண்ட் உள்ளிட்ட வங்கித்துறை பங்குகளும், மாருதி உள்ளிட்ட ஆட்டோமொபைல துறை பங்குகளும், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத் தொடர்புத்துறை பங்குகளும் உயர்வடைந்தன.