

அரசுத் துறைகளில் நடக்கும் மோசடி களை அடையாளம் காண புதிய வழி முறைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமைத் தணிக்கைக் குழுவுக்கு (சிஏஜி) அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று பிரதமர் மோடி தலைமை தணிக்கைக் குழு அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத் தில் கலந்துகொண்டு தணிக்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடி னார். அப்போது தணிக்கை செய் வது தொடர்பான பல்வேறு விவ காரங்கள் குறித்து விவாதித்தார்.
அக்கூட்டத்தில் அரசுத் துறை களில் நடக்கும் மோசடிகளைக் கண்டறியும் வகையிலான புதிய வழிமுறைகளை தணிக்கை குழு உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவாக்கும் இலக்கில் அரசுத் துறைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே அவற்றில் நடக்கும் மோசடிகளைக் கண்டறிய வேண்டியது மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள் ளார்.
அரசு நிர்வாகத்தில் நடக்கும் மோசடிகளைக் கண்டறியச் செய் வதன் மூலம் நிர்வாகத் திறனையும் மேம்படுத்த முடியும் என்று சிஏஜியிடம் அவர் கூறினார்.
மேலும், 2022-ல் ஆதாரங்கள் அடிப்படையிலான கொள்கை முடிவுகள் எடுக்கும் முயற்சியில் அரசு செயல்பட இருப்பதாகவும், அதுதொடர்பான புள்ளி விவரங் களை சேகரிப்பதிலும் ஆய்வு செய்வதிலும் சிஏஜி மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.