

குஜராத் மாநிலத்தில் சீர்த்திருத்தங் களை செய்தது போல பொதுத் துறை நிறுவனங்களிலும் சீர் திருத்தங்கள் செய்யும் பட்சத்தில் அந்நிறுவனங்களின் பங்கு மதிப்பு 30 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க தரகு நிறுவன மான மார்கன் ஸ்டான்லி கூறியிருக் கிறது.
அரசியல் குறுக்கீடுகள், தன்னாட்சி அதிகாரம் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் பொதுத்துறை நிறுவனங்கள் 30 சதவீதம் வரை குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. கோல் இந்தியா, பவர் கிரிட், பிபிசிஎல், என்.டி.பி.சி. மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களில் சீர்த்திருத்தங்களை கொண்டு வரும் போது அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் இந்த பங்குகள் நல்ல ஏற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.,
மோடி குஜராத்தில் இருந்த காலத்தில் பொதுத்துறை நிறுவ னங்கள் நல்ல வளர்ச்சி அடைந்தன. கடந்த 10 வருடங் களில் 55 பொதுத்துறை நிறுவ னங்கள் சிறப்பாக செயல்பட வில்லை.