உலகின் தலை சிறந்த சிஇஓ-க்கள் பட்டியல்: மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா முதல் இடம்

உலகின் தலை சிறந்த சிஇஓ-க்கள் பட்டியல்: மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா முதல் இடம்
Updated on
1 min read

அமெரிக்க இதழான பார்ச்சூன் உலகளாவிய 20 தலை சிறந்த தொழில் நிறுவனத் தலைவர்களை பட்டியலிட்டுள்ளது. அதில் இந்தியரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்ய நாதெள்ளா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இருபது பேர் அடங்கிய அந்தப் பட்டியலில், சத்ய நாதெள்ளா தவிர இரண்டு இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர்.

மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்கா 8-வது இடத்தையும், அரிஸ்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய்ஸ்ரீ உல்லால் 18-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.

சத்ய நாதெள்ளா 2014-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பு ஏற்பதற்குமுன் அவர் பெரிய அளவில் அறியப்பட்டதில்லை.

ஆனால், அவர் பதவி ஏற்ற பிறகு அந்நிறுவனத்தை மிகச் சிறந்த முறையில் வழிநடத்தி உள்ளார். அந்த வகையில் அவர் மிகச் சிறந்த தலைவராக திகழ்கிறார் என்று பார்ச்சூன் இதழ் தெரிவித்து உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in