சீனா பிரச்சினையை இந்தியா சமாளிக்க முடியும்: ஐசிஐசிஐ தலைவர் சாந்தா கொச்சார் உறுதி

சீனா பிரச்சினையை இந்தியா சமாளிக்க முடியும்: ஐசிஐசிஐ தலைவர் சாந்தா கொச்சார் உறுதி
Updated on
1 min read

சீனா பிரச்சினையால் இந்தியா சந்தித்து வரும் பிரச்சினைகளை நாம் எளிதாகச் சமாளிக்க முடியும் என்று ஐசிஐசிஐ வங்கித்தலைவர் சாந்தா கொச்சார் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது.

தற்போது இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்பது சர்வதேச சூழ்நிலைகளால் உருவாகியுள்ளது. இந்த ஏற்ற இறக்க சூழ்நிலையை நாம் சமாளிக்க முடியும். நாம் உலகமயமாக்கலில் இருக்கிறோம். சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் இந்தியாவிலும் ஏற்படும். ஆனால் இந்தியாவுக்கு வரும் முதலீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

நமது நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்திருக்கிறது. நம்மிடம் 38,000 கோடி டாலர் அளவுக்கு அந்நியச் செலாவணி கைவசம் இருக்கிறது. நம்முடைய இறக்குமதிக்கான அந்நிய முதலீடுகளை நாம் பெரிதும் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இல்லை. நிதிப்பற்றாக்குறை, பணவீக்கம் என அனைத்து விஷயங்களிலும் நாம் சரியான பாதையிலே பயணிக்கிறோம். இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது தற்போதைய இந்த ஏற்ற இறக்க சூழ்நிலையை இந்தியா எளிமையாக சமாளிக்க முடியும் என்றார்.

கடந்த திங்கள் கிழமை பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in