

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று 300 புள்ளிகள் அதிகரித்து 40,816 புள்ளிகளை கடந்தது.
பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை 1நேற்று 511 ரூபாயைத் தொட்டது. இந்த விலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மிக அதிகமாகும். 633 கோடி பங்குகளின் மொத்த விலையின் மூலம் அதன் பங்கு மூலதனம் 9.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் அதிகரித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று 300 புள்ளிகள் அதிகரித்து 40,816 புள்ளிகளை கடந்தது. இதன் மூலம் 40790 என்ற முந்தைய சாதனையை முறிடியத்தது.
இதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 12,027 புள்ளிகளை தொட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் இன்றும் உயர்ந்தன. காலை நேர நிலவரப்படி 4 சதவீத அளவுக்கு அதன் பங்குகள் உயர்ந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று 1,571.85 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.