

வாகன விற்பனை சமீப காலமாக சரிவை சந்தித்து வந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் விற்பனை சற்று உயர்ந்து உள்ளது. வாகன விற்பனை அக்டோபர் மாதம் 4 சதவீதம் உயர்ந்து இருப்பதாக ஆட்டோமொபைல் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்து உள்ளது.
வாகன விற்பனை கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சரிவை சந்தித்து வந்தது. பண்டிகை தினத்தை ஒட்டி விற்பனை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகைகள் கடந்த மாதத்தில் வந்ததால் வாகன விற்பனை உயர்ந்து உள்ளது.
பயணிகள் வாகனங்கள் பிரிவில் விற்பனை இந்த ஆண்டு 11 சதவீதம் உயர்ந்து 2,48,036 ஆக உள்ளது. இரு சக்கர வாகனங்களின் விற்பனை 5 சதவீதம் உயர்ந்து 13,34,941 ஆக உள்ளது. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 4 சதவீதம் உயர்ந்து 59,573 ஆக உள்ளன.
மொத்தமாக அக்டோபர் மாதத்தில் 17,09,610 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.