Published : 19 Nov 2019 08:28 AM
Last Updated : 19 Nov 2019 08:28 AM

பொருளாதார தேக்கநிலை காரணமாக ஐ.டி. துறையில் 40 ஆயிரம் பேர் வேலை இழப்பர்: டி.வி. மோகன்தாஸ் பாய் கருத்து

தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் தேக்க நிலை காரணமாக இந்த ஆண்டு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழப்பர் என்று தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநரான டி.வி. மோகன்தாஸ் பாய் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக (சிடிஓ) பணியாற்றி தற்போது மணிபால் குழும கல்வி நிறுவன தலைவராக இருக்கும் மோகன்தாஸ் பாய்,தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற தேக்க நிலை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்று குறிப்பிட்டார்.

மேலை நாடுகளில் அனைத்து துறைகளிலும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு சில குறிப்பிட்ட துறைகள் மட்டும்தான் தேக்கநிலையைசந்தித்துள்ளது. தற்போது நடுத்தரபிரிவில் உள்ள பணியாளர்கள்தான் அதிலும் குறிப்பாக தங்களதுதகுதியை மேம்படுத்திக் கொள்ளாதவர்கள் தான் வேலையை இழக்க நேரிடும் என்று கூறினார்.

தாங்கள் பெறும் ஊதியத்துக்கு ஏற்ப தங்களது திறமையை வளர்த்துக்கொள்ளாதவர்கள்தான் இதுபோன்ற ஆள் குறைப்பு நடவடிக்கையில் பணிகளை இழப்பர் என்றார்.

நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும்போது பதவி உயர்வு அளிப்பது என்பது வழக்கமான நிகழ்வாக இருக்கும். அதேசமயம் தேக்கநிலை நிலவும்போது அதிக ஊதியம் பெறுவோரைத்தான் முதலில் வேலையிலிருந்து எடுக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

80% பேருக்கு வேலைஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் இத்தகைய நிகழ்வு ஐடி துறையில் நடந்துகொண்டுதானிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பணியிழப்பவர்களில் திறமையானவர்கள் இருந்தால் அவர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை நிச்சயம் கிடைக்கும். அந்தவகையில் 80 சதவீதம் பேருக்கு வேலை கிடைத்து விடுவதாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x