

நஷ்டத்தில் இயங்கிவரும் ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் (ஆர்காம்) அதன் சொத்துகளை ஏலத்தில் விற்க முடிவு செய்துள் ளது. ஆனால், இதுதொடர்பான நடவடிக்கையில் ஆர்காம் நியாயமற்று செயல்படுகிறது என்று ஏர்டெல் நிறுவனம் குற்றம்சாட்டி உள்ளது. அதைத் தொடர்ந்து அதன் சொத்துகளை வாங்குவது தொடர்பான விண்ணப்பத்தையும் ஏர்டெல் நிறுவனம் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குநர் ஹர்ஜீத் கோலி, தீர்வு நடவடிக்கை அதிகாரி அனிஷ் நிரஞ்சன் நானாவதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், `ஏலம் தொடர்பாக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று நாங் கள் வேண்டுகோள் விடுத்து இருந் தோம். ஆனால் அப்போது ஆர்காம் நிறுவனம் எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தது. ஆனால், தற்போது இன்னொரு நிறுவனம் அதே கோரிக்கையை முன்வைத்த நிலை யில், அதை ஏற்று காலக் கெடுவை நீட்டித்துள்ளது. இது நியாயமற்ற செயல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி இன்ஃபிராடெல் நிறுவனங்கள் முறையே ஆர்காம் நிறுவனத்தின் அலைக்கற்றை மற்றும் மொபைல் டவர்களை வாங்க விண்ணப்பித்து இருந்தன. அதற்கான நடைமுறை செயல்பாடு தொடர்பான விவரங் களை சமர்ப்பிக்க நவம்பர் 11 வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந் தது. அதை டிசம்பர் 1 வரை நீட்டிக்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. ஆர்காம் நிறுவனம் அதை ஏற்க மறுத்தது. இதுகுறித்து அவர் கூறியபோது, ‘காலக்கெடு நீட்டிக்க மறுக்கப்பட்டதால் நெருக்கடியான சூழ்நிலையிலேயே அனைத்து நடைமுறைகளையும் மேற் கொண் டோம். ஆனால் தற்போது இன் னொரு நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நவம்பர் 25 வரை அவகாசத்தை நீட்டித்து உள்ளது. இந்த நியாயமற்ற நட வடிக்கையின் காரணமாக நாங்கள் எங்கள் விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்’ என்று அவர் தெரிவித்தார். (ஏலத்துக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுத்த மற்றொரு நிறுவ னம் ரிலையன்ஸ் ஜியோ ஆகும்).