

பொதுத் துறை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் இரண்டும் வரும் 2020 மார்ச்சுக்குள் தனியாருக்கு விற்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்தார்.
பொருளாதார மந்த நிலை நீடித்து வரும் நிலையில் அரசின் வரி வருவாயும் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக தனியார் ஊடக நிறுவனத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,
“பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்ய அனைத்துவிதமான முயற்சிகளையும் அரசு மேற் கொண் டுள்ளது. அரசு மேற்கொண்ட நட வடிக்கைகளின் பலன்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகள் மேம் பட்டிருக் கின்றன. வங்கிகள் கடன் வழங்கும் அளவு அதிகரித்துள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் நெருக்கடியும் குறைந்துவருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர் கள் தற்போது நெருக்கடியி லிருந்து மீண்டுவந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அரசின் சீர்திருத்தங் கள் அனைத்தும் மெல்ல பலன் களைக் காட்டத் தொடங்கியிருக் கின்றன.
நேர்மையானவர்களுக்கு எந்த வித நெருக்கடியும் இல்லாத வகை யில் அரசு திட்டமிட்டு செயல் படுகிறது. விரைவில் இந்தியா தற் போது எதிர்கொண்டு வரும் நெருக்கடியிலிருந்து மீளும்” என்று கூறினார்.
ரூ.1.8 லட்சம் கோடி கடன்
பொருளாதார மந்த நிலை குறித்த தகவல்கள் நுகர்வோர் நம்பிக்கையைச் சற்று பாதித்த நிலை யில், அரசின் பல்வேறு வரிச் சலுகை நடவடிக்கைகள், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் நுகர்வோர் நம் பிக்கையில் முன்னேற்றம் தெரி கிறது. விழாக்கால கடன் வழங்கும் நடவடிக்கையில் வங்கிகள் ரூ.1.8 லட்சம் கோடி அளவில் கடன்களை வழங்கியிருப்பதே அதற்கு சான்று என்றார்.
மேலும் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் பங்கு விற்பனை குறித்து கூறுகை யில், “ஏர் இந்தியா, பாரத் பெட் ரோலியம் இரண்டு நிறுவனங்களும் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் அதாவது 2020 மார்ச் மாதத்துக்குள் விற்பனை செய்யப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரி தமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
முதலீட்டாளர்கள் ஆர்வம்
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதில் பல முதலீட்டாளர் கள் ஆர்வமுடன் உள்ளனர். இந்த இரு நிறுவனங்களின் விற் பனை வெற்றிகரமாக நடந்து பங்கு விலக்கல் இலக்கு எட்டப்படும் என நம்புகிறோம்” என்று கூறினார்.
ஏர் இந்தியாவுக்குத் தற்போது ரூ.58 ஆயிரம் கோடி கடன் உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க இரண்டு வருடங்களாக அரசு முயற்சித்துவருகிறது. கடந்த ஆண்டு 76 சதவீத பங்குகளை மட்டுமே விற்க அரசு முன் வந்தது. ஆனால், ஒரு முதலீட்டாளர் கூட ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.