

முன்னணி தனியார் தொலை தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, செப்டம்பர் மாதம் முடிந்த நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.50,921 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளது. இது இந்நிறுவனம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அளவிலான நஷ்டம் ஆகும்.
சென்ற ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.4,974 கோடி நஷ்டத்தை சந்தித்தது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.10,844 கோடியாக உள்ளது.
அலைக்கற்றைக்கான நிலுவைத் தொகைகளை மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்காக நிதிஒதுக்கியதால் இந்த அளவில் நஷ்டத்தை நிறுவனம் எதிர்கொண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத கணக்கில் நிறுவனத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.1,17,300 கோடியாக உள்ளது.