Published : 15 Nov 2019 11:39 AM
Last Updated : 15 Nov 2019 11:39 AM

முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பிரேசிலியா

உலக நாடுகளில் முதலீட்டுக்கு ஏதுவான பொருளாதார சூழலைக் கொண்ட நாடாக இந்தியா திகழ் வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், முதலீடு செய்வதற்கு ஏற்ற வகையில் எண்ணற்ற வாய்ப்புகள் இந்தியாவில் இருப்பதாக தெரி வித்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று மோடி பேசியபோது, பிரிக்ஸ் நாடுகளை இந்தியாவில் முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

இந்தியா அதன் அரசியல் நிலைத் தன்மை காரணமாக முத லீட்டுக்கு ஏற்ற நாடாக உள்ளது. வணிகம் தொடர்பான இந்தி யாவின் கொள்கைகள் முதலீட் டாளர்களுக்கு மிகவும் ஏது வானவை. எனவே பிரிக்ஸ் நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 2025-ம் ஆண்டுக் குள் 5 டிரில்லியன் டாலர் பொரு ளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்து உள்ளோம். அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க 1.5 டிரில்லியன் டாலர் அளவில் முதலீடுகள் செய்யப்பட உள்ளன என்று தெரிவித்தார்.

உலகப் பொருளாதார வளர்ச் சியில் பிரிக்ஸ் நாடுகள் 50 சதவீத அளவில் பங்கு வகிக்கின்றன. உலக அளவில் பொருளாதார மந்த நிலை காணப்பட்டாலும், பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. புதிய தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகள் மூலம் வளர்ச்சியை சாத்தியப்படுத்தி உள்ளன. அதன் மூலம் ஏழ்மையை போக்கி உள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நமது எதிர்கால நோக்கங்களுக்கான சிறந்த தளமாக இந்தக் கூட்டமைப்பு திகழ்வதாக அவர் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே யான வரி தொடர்பான நடை முறைகள் எளிமையாகி வரு கின்றன. வர்த்தகச் சூழலும் சாதகமாக மாறி வருகிறது. அது இருதரப்பு வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும்; முதலீடுகளை பெருக்கச் செய்யும். அந்த வகையில் நம் ஐந்து நாடுகளின் வர்த்தகம் சார்ந்த தனித்துவம்மிக்க துறைகளை கண்டறிய வேண்டும். அதை அடிப்படையாக கொண்டு வரும் காலங்களில் வர்த்தக முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியர்கள் பிரேசிலுக்கு செல்ல விசா தேவையில்லை என்று பிரேசில் தெரிவித்துள்ளது. அதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் ஃபோல்சனாரோவுக்கு மோடி நன்றி தெரிவித்தார். பிற நாடுகளும் இதுபோன்ற சமூக பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பொருளாதார ரீதியாக முன் னேறி வரும் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு மாநாடு சீனாவிலும், 2018-ம் ஆண்டு மாநாடு தென் ஆப்ரிக்காவிலும் நடத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x