வளர்ச்சி 5.6 சதவீதமாகக் குறையும்: பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் கணிப்பு

வளர்ச்சி 5.6 சதவீதமாகக் குறையும்: பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் கணிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி

நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் கணித்துள்ளது. எதிர்பார்த்ததைவிட பொருளாதார மந்தநிலை தொடர்ந்து நீடித்து வருவதாக அந்நிறுவனம் தெரி வித்துள்ளது.

2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.2 சத வீதமாக இருக்கும் என்று முன்பு கணித்து இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் அதை 5.8 சதவீதமாக குறைத்தது. இந்நிலை யில் நடப்பு ஆண்டில் வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.

2018-ம் ஆண்டு இரண்டாம் பாதியிலிருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவீதமாக குறைந்து உள்ளது. இந்நிலையில், 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் வளர்ச்சி வீதம் சற்று உயரக்கூடும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020 ஆண்டில் வளர்ச்சி 6.6 சதவீதமாகவும் 2021 ஆண்டில் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

முந்தைய காலங்களில் இருந்ததைவிட இந்த வளர்ச்சி வீதம் குறைவானது என்றும் குறிப்பிட்டுள்ளது. நுகர்வும், தேவையும் குறைந்து இருப்பதே தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் என்று அந்நிறுவனம் தெரி வித்துள்ளது.

தற்போதைய பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய, மத்திய அரசு சில மீட்பு நடவடிக்கைகளை எடுத்தது. 10 பொதுத் துறை வங்கிகள் 4 வங்கிகளாக மாற்றப் பட்டன; நிறுவனங்களின் நிறுவன வரி 10 சதவீதம் அளவில் குறைக்கப் பட்டது.

ஆனால், இவையெல்லாம் மக்களின் நுகர்வு திறனை அதிகரிக்கக் கூடியதாக இல்லை என அந்நிறுவனம் தெரி வித்துள்ளது. வேலையின்மை அதிகரித்து இருப்பது மக்களின் நுகர்வு குறைந்ததுக்கு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in