Last Updated : 13 Nov, 2019 08:11 PM

 

Published : 13 Nov 2019 08:11 PM
Last Updated : 13 Nov 2019 08:11 PM

உணவுப்பொருட்களின் அதிக விலையால் அக்டோபர் சில்லறை வர்த்தக பணவீக்க விகிதம் 4.62% ஆக அதிகரிப்பு

பிரதிநிதித்துவ படம்.

புதுடெல்லி

உணவுப்பொருட்களின் விலை உயர்வினால் சில்லரை பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 4.62% ஆக அதிகரித்துள்ளது என்று புதனன்று வெளியிடப்பட்ட அரசு தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்க விகிதம் செப்டம்பரில் 3.99% ஆக இருந்தது. இது அக்டோபர் 2018-ல் 3.38% ஆகவும் இருந்தது.

நுகர்வோர் உணவு விலை பணவீக்க விகிதம் அக்டோபர் 2019-ல் 7.89% ஆக அதிகரித்துள்ளது, இது கடந்த மாதத்தில் 5.11% ஆகவே இருந்தது.

மத்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கையை தீர்மானிக்க நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படை பணவீக்கத்தையே எடுத்துக் கொள்கிறது.

மத்திய ரிசர்வ் வங்கி சில்லறைப் பணவீக்க விகிதத்தை 4%க்குள் வைத்திருக்க இலக்குக் கொண்டிருந்தது.

அதே போல் ஊரக பணவீக்க விகிதம் அக்டோபரில் 4.29% ஆக அதிகரித்துள்ளது, இது கடந்த மாதம் 3.24% ஆக இருந்தது. நகர்ப்புற உணவுப்பணவீக்க விகிதம் 10.47%க்குத் தாவியது. இது செப்டம்பர் மாதத்தில் 8.76% ஆக இருந்தது.

நகர்ப்புறப் பகுதிகளின் பணவீக்க விகிதம் 5.11% ஆக உள்ளது. இது செப்டம்பரில் 4.78% ஆக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x