

ஹேர் (Haier) இந்தியா நிறுவனத்தின் தலைவர். செப்டம்பர் 2009லிருந்து இந்தப் பொறுப்பில் இருக்கிறார்.
ஹேர் அப்ளையன்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை, சந்தை மற்றும் இந்தியாவில் அனைத்து செயல்பாடுகளுக்குமான பொறுப்பாளராக உள்ளார்.
இந்தியாவில் ஹேர் நிறுவனத்தின் உத்திகளை மாற்றி முன்னணி நிறுவனமாக கொண்டு வந்தவர். திட்டமிடுதல் மற்றும் நிர்வாகவியல் துறைகளில் வல்லுனர்.
இதற்கு முன்பு வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எலக்ட்ரோலக்ஸ் ஹூண்டாய் பிரிவில் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றியவர்.
வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி, விற்பனை மற்றும் சந்தை பிரிவின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் துறையில் 32 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். நோவினோ பாட்டரிஸ், சில்வேனியா லக்ஷ்மன் போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
டெல்லியிலுள்ள ராம் வணிகவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.