Published : 11 Nov 2019 08:33 PM
Last Updated : 11 Nov 2019 08:33 PM

செப்டம்பரில் தொழிற்துறை உற்பத்தி 4.3% குறைந்தது 

புதுடெல்லி, பிடிஐ

செப்டம்பர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 4.3% குறைந்தது, உர்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டின் படி கணக்கிடப்படும் தொழிற்சாலை உற்பத்ஹ்டி செப்டம்பர் 2018-ல் 4.6% விரிவடைந்தது.

தற்போது உற்பத்தித் தொழிற்துரையில் மந்த நிலை காணப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்ட வளர்ச்சி 4.8% ஆக இருக்கும் போது இந்த ஆண்டீல் இது 3.9% ஆகக் குறைந்துள்ளது.

அதே போல் மின் உற்பத்தித் துறையிலும் உற்பத்தி 2.6% குறைந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மின் உற்பத்தி 8.2% வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுரங்க உற்பத்தித் துறையிலும் 8.5% சரிவு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x